/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பைக் மீது லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி பைக் மீது லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி
பைக் மீது லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி
பைக் மீது லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி
பைக் மீது லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி
ADDED : ஜூன் 07, 2025 02:09 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே சகாயநகரில், பைக் மீது லாரி மோதிய விபத்தில், மின்வாரிய ஊழியர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
பவுஞ்சூர் அடுத்த மாணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாசுதீன், 40. இவர், கிழக்கு தாம்பரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில்,'கேங்மேன்' வேலை செய்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல், தன் 'பஜாஜ் பல்சர்' பைக்கில் வேலைக்குச் சென்றார்.
காலை 9:00 மணியளவில், பவுஞ்சூர் அடுத்த சகாயம் நகரில் சென்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரி, இவரது பைக் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த போது, லாரி ரியாசுதீன் மீது ஏறி உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார்.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு போலீசார், ரியாசுதீன் உடலைக் கைப்பற்றி, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, தப்பிச் சென்ற ஓட்டுநரை தேடி வருகின்றனர்.