/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையை கடந்த மூதாட்டி பேருந்து மோதி உயிரிழப்பு சாலையை கடந்த மூதாட்டி பேருந்து மோதி உயிரிழப்பு
சாலையை கடந்த மூதாட்டி பேருந்து மோதி உயிரிழப்பு
சாலையை கடந்த மூதாட்டி பேருந்து மோதி உயிரிழப்பு
சாலையை கடந்த மூதாட்டி பேருந்து மோதி உயிரிழப்பு
ADDED : செப் 12, 2025 10:05 PM
குரோம்பேட்டை:திருநீர்மலை, வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி, 61. இவர், நேற்று முன்தினம் மாலை, குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, தாம்பரத்தில் இருந்து கே.கே.,நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்து, மூதாட்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரங்கநாயகி மீது, பேருந்தின் முன் இடது பக்க டயர் ஏறி, இறங்கியது.
இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பேருந்து ஓட்டுநரான, வந்தவாசியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 41, என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.