/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ துரியோதனன் படுகளம் திருப்போரூரில் விமரிசை துரியோதனன் படுகளம் திருப்போரூரில் விமரிசை
துரியோதனன் படுகளம் திருப்போரூரில் விமரிசை
துரியோதனன் படுகளம் திருப்போரூரில் விமரிசை
துரியோதனன் படுகளம் திருப்போரூரில் விமரிசை
ADDED : ஜூன் 22, 2025 10:59 PM

திருப்போரூர்:திருப்போரூர் திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்போரூரில், பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு, 102ம் ஆண்டு அக்னி வசந்த விழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், இரவில் திருவீதியுலாவும் நடைபெற்றன.
மேலும், கோவில் வளாகத்தில் பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவில் பாரத கூத்தும் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
விழாவில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் குவிந்து, அம்மனை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை, திரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.