Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கமிஷனரை கண்டித்து ஆர்ப்பாட்டம் போலீசார், கட்சியினர் தள்ளுமுள்ளு

கமிஷனரை கண்டித்து ஆர்ப்பாட்டம் போலீசார், கட்சியினர் தள்ளுமுள்ளு

கமிஷனரை கண்டித்து ஆர்ப்பாட்டம் போலீசார், கட்சியினர் தள்ளுமுள்ளு

கமிஷனரை கண்டித்து ஆர்ப்பாட்டம் போலீசார், கட்சியினர் தள்ளுமுள்ளு

ADDED : ஜன 03, 2024 09:47 PM


Google News
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில் 50வது வார்டு கவுன்சிலர் யாக்கூப், 'சென்னை கிறிஸ்துவ சமுதாய கல்லுாரியை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 'சீல்' வைத்தது ஏன்' என, கமிஷனரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறாமல், மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா ஒருமையில் பேசினார்.

இதை கண்டித்து, ம.ம.க., மற்றும் வி.சி., கட்சியினர் நேற்று, தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ம.ம.க., துணை பொது செயலரும், கவுன்சிலருமான யாக்கூப், வி.சி., துணை பொது செயலர் வன்னியரசு ஆகியோர் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பதற்றமான சூழ்நிலை உருவானதால், போலீசார், ஆண்களையும், பெண்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, வாகனத்தில் ஏற்றினர். இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின், அனைவரையும் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us