/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/காசிபாட்டை சாலை மண் அரிப்பால் சேதம் தரைப்பாலம் அமைக்காததால் அவதிகாசிபாட்டை சாலை மண் அரிப்பால் சேதம் தரைப்பாலம் அமைக்காததால் அவதி
காசிபாட்டை சாலை மண் அரிப்பால் சேதம் தரைப்பாலம் அமைக்காததால் அவதி
காசிபாட்டை சாலை மண் அரிப்பால் சேதம் தரைப்பாலம் அமைக்காததால் அவதி
காசிபாட்டை சாலை மண் அரிப்பால் சேதம் தரைப்பாலம் அமைக்காததால் அவதி
ADDED : பிப் 06, 2024 04:14 AM

செய்யூர் : செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சியில், கோட்டைக்காடு கிராமத்தில் இருந்து விளம்பூர் வரையில், 7 கி.மீ., துாரமுடைய வரலாற்று சிறப்புமிக்க காசிபாட்டை சாலை உள்ளது.
பண்டைய காலத்தில் வாழ்ந்த அவ்வையார், நத்தத்தனார், இடைக்காட்டு சித்தர் உள்ளிட்டோர், இச்சாலையில் நடைபயணம் செய்ததாகவும், காசி முதல் ராமேஸ்வரம் யாத்திரை செல்லும் பக்தர்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வேம்பனுார் கிராமத்தில் உள்ள ஓடைப்பகுதியில், ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது.
மேலும், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் புதிதாக சாலையில் செல்வோர், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து சிக்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாலை சேதமடைவது தொடர்கதையாகி வருவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த பகுதியில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.