ADDED : மே 18, 2025 01:53 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பூரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 50 விவசாயி. காளை மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை இரண்டு காளை மாடுகளுக்கு தீவனம் வழங்கி விட்டு, வயல்வெளியில் கட்டிவிட்டு சென்றார். இரவு இடியுடன் கூடிய மழை பெய்தபோது மின்னல் தாக்கி ஒரு காளை மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.