/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கோரி புகார் மனு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கோரி புகார் மனு
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கோரி புகார் மனு
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கோரி புகார் மனு
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கோரி புகார் மனு
ADDED : மே 12, 2025 12:30 AM
தாம்பரம்:சேலையூர் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், ரேஷன் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது, ரேஷன் அரிசியை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இது தொடர்பாக, தாம்பரம் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாறாக, புகார் அளித்ததும், அதிகாரிகள் கொடுக்கும் தகவலால் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் உஷாராகி விடுகின்றனர். கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால், இப்பிரச்னை குறித்து, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி கமிஷனரிடம், பத்து ரூபாய் இயக்கம் சார்பில், நேற்று முன்தினம் புகார் மனு அளிக்கப்பட்டது.
புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
வேங்கைவாசல் ஊராட்சிக்குட்பட்ட, விக்னராஜபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தினமும் ரேஷன் பொருட்கள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல், வேங்கைவாசல் பிரதான சாலையில் ரேஷன் அரிசி கடத்தலும் நடக்கிறது. அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினாலே உண்மை தெரிந்து விடும். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.