/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரூ.80 லட்சம் ஏமாற்றிய பா.ஜ., பிரமுகர் மீது புகார் ரூ.80 லட்சம் ஏமாற்றிய பா.ஜ., பிரமுகர் மீது புகார்
ரூ.80 லட்சம் ஏமாற்றிய பா.ஜ., பிரமுகர் மீது புகார்
ரூ.80 லட்சம் ஏமாற்றிய பா.ஜ., பிரமுகர் மீது புகார்
ரூ.80 லட்சம் ஏமாற்றிய பா.ஜ., பிரமுகர் மீது புகார்
ADDED : ஜூன் 28, 2025 04:39 AM
தாம்பரம்:வாங்கிய கடனை திருப்ப தராமல், பா.ஜ., பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக, தனியார் பள்ளி ஆசிரியை, தாம்பரம் போலீஸ் கமிஷனரக்தில் புகார் அளித்துள்ளார்.
புது பெருங்களத்துாரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ரம்யா என்பவர், பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பா.ஜ., பொறுப்பாளராக உள்ள பழனிவேலன் மீது, தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் நேற்று, பண மோசடி புகார் அளித்தார்.
அதன் விபரம்:
என் கணவர் பஹ்ரைன் நாட்டில் பணிபுரிகிறார். நான் தனியார் பள்ளி ஆசிரியையாக உள்ளேன். எங்களுக்கு பழக்கமான பழனிவேலன், அவரது மனைவி தேவகி ஆகியோர், மருத்துவ தேவைக்காக பல தவணைகளாக 20 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கினர்.
அதேபோல், அவர்களது நண்பர் அமல்ராஜ் என்பவருக்கு மூன்று லட்சம் ரூபாய், விஜயலட்சுமி என்பவருக்கு 8 லட்சம் ரூபாய், கணேசன் என்பவருக்கு 4.50 லட்சம் ரூபாயை, அவர்களது வங்கி கணக்கு வாயிலாக தந்துள்ளேன்.
என்னிடமிருந்து பழனிவேலன், அவரது நண்பர்கள் தரப்பில் இருந்து 80 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். இப்பணத்தை திருப்பித் தரவில்லை.
நெடுங்குன்றத்தில் எங்களுக்கு சொந்தமான இடத்தையும் பழனிவேலன் அவரது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். பணத்தையும், இடத்தையும் திருப்பி கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார். பணம், இடத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்புகார் மனுவை பெற்ற போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.