/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தகிக்கும் கோடை வெயிலால் தவிப்பு சிற்ப பகுதிகளில் குளிர்ந்த நீர் அவசியம் தகிக்கும் கோடை வெயிலால் தவிப்பு சிற்ப பகுதிகளில் குளிர்ந்த நீர் அவசியம்
தகிக்கும் கோடை வெயிலால் தவிப்பு சிற்ப பகுதிகளில் குளிர்ந்த நீர் அவசியம்
தகிக்கும் கோடை வெயிலால் தவிப்பு சிற்ப பகுதிகளில் குளிர்ந்த நீர் அவசியம்
தகிக்கும் கோடை வெயிலால் தவிப்பு சிற்ப பகுதிகளில் குளிர்ந்த நீர் அவசியம்
ADDED : மார் 23, 2025 08:13 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில், குளிர்ந்த நீர் வழங்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர்.
மாமல்லபுரம், பிரபலமான சுற்றுலா பகுதியாக விளங்குகிறது.
இங்குள்ள பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், பயணியரை கவர்ந்து, அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர்.
பொதுத்தேர்வு துவங்கியுள்ள நிலையில், தேர்வுகள் முடிந்த பின், கோடை விடுமுறை விடப்படும். விடுமுறையில் பயணியர் கூட்டம், மாமல்லபுரத்தில் வருவது அதிகரிக்கும்.
இச்சூழலில், மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில், பயணியருக்கு குளிர்ந்த குடிநீர் அவசியமாக வைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இதில், கடற்கரை கோவில் பகுதியில் மட்டும், தனியார் நன்கொடையில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது.
ஆனால், மற்ற சிற்ப பகுதிகளில், குடிநீர் வசதி செய்யப்படவில்லை. தற்போதே கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மாமல்லபுரத்தில் பயணியர் குடிநீரின்றி தவிக்கின்றனர்.
பாட்டில் குடிநீர் வாங்க அதிக தொகை செலவாகும் நிலையில், வெளியில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், சிரமம் ஏற்படுகிறது.
எனவே, கோடை காலம் கருதி, பிரதான சிற்ப வளாகங்களில், தொல்லியல் துறை சார்பில் குளிர்ந்த குடிநீர் வழங்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர்.