/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சென்னை செயின்ட் பீட்ஸ் பீச் வாலிபாலில் 'சாம்பியன்'சென்னை செயின்ட் பீட்ஸ் பீச் வாலிபாலில் 'சாம்பியன்'
சென்னை செயின்ட் பீட்ஸ் பீச் வாலிபாலில் 'சாம்பியன்'
சென்னை செயின்ட் பீட்ஸ் பீச் வாலிபாலில் 'சாம்பியன்'
சென்னை செயின்ட் பீட்ஸ் பீச் வாலிபாலில் 'சாம்பியன்'
ADDED : பிப் 10, 2024 10:17 PM

சென்னை:தமிழக அரசின், பள்ளிக்கல்வித் துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், மாணவ - மாணவியருக்கான மாநில அளவில் பீச் வாலிபால், கோவளத்தில் நடந்தது.
இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 38 மாவட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயதினருக்கு, தனித்தனியாக நடந்தன.
மாணவியருக்கான போட்டிகளை தொடர்ந்து, மாணவர்களுக்கான போட்டிகள் நேற்று நிறைவடைந்தன.
இதில், 19 வயதினருக்கான இறுதி போட்டியில், சென்னை அணியாக களமிறங்கிய செயின்ட் பீட்ஸ் மற்றும் மயிலாடுதுறை அணிகள் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான இப்போட்டியின் முடிவில், 19 - 21, 21 - 19, 15 - 12 என்ற கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது. தஞ்சை மற்றும் நெல்லை, கடைசி இரு இடங்களை பிடித்தன.
மற்றொரு பிரிவான 17 வயதினரில், துாத்துக்குடி, 21 - 10, 21 - 12, என்ற கணக்கில் திருப்பூரை வீழ்த்தியது. மதுரை மற்றும் திருச்சி அணிகள், முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றின.
தொடர்ந்து, 14 வயதினரில் மயிலாடுதுறை அணி 21 - 14, 21 - 14 என்ற நேர் செட் கணக்கில் விழுப்புரத்தை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது. மூன்றாம் இடத்தை துாத்துக்குடியும், கிருஷ்ணகிரி நான்காம் இடத்தையும் வென்றன.