Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பேட்மின்டன் போட்டி சென்னை வீரர்கள் சாம்பியன்

பேட்மின்டன் போட்டி சென்னை வீரர்கள் சாம்பியன்

பேட்மின்டன் போட்டி சென்னை வீரர்கள் சாம்பியன்

பேட்மின்டன் போட்டி சென்னை வீரர்கள் சாம்பியன்

ADDED : மார் 25, 2025 07:50 AM


Google News
சென்னை: 'டீம் 16 அமைப்பு' சார்பில், 'தி அல்டிமேட் பேட்மின்டன் ஷோடவுன்' என்ற தலைப்பில் மாவட்ட பேட்மின்டன் போட்டி, நேற்று முன்தினம் நீலாங்கரையில் நடந்தது.

இதில், சென்னை, திருச்சி உட்பட, எட்டு மாவட்டங்களில் இருந்து, 230க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டி, இரண்டு பிரிவுகளாக, 'நாக்- அவுட்' முறையில் நடந்தது. இதில், 90க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிட்டன.

சென்னை சார்பில், டீம் - 1, டீம் - 2 என, இரு அணிகள் பங்கேற்றன. ஆண்கள் இரட்டையர் பிரிவில், சென்னையின் நவீன், சஞ்சய் ஸ்ரீவத்சா அணி, 21 - 16, 21 - 17 என்ற புள்ளி கணக்கில், சென்னையின் மற்றொரு அணி வீரர்களான கார்த்திக்ராஜா, ஸ்ரீஹரியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில், புதுச்சேரியின் ப்ரீஜன் - ஸ்ரீமீனாட்சி, சென்னையின் நவீன் - அக் ஷயாவை 21 - 11, 21 - 14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us