/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை மீட்டெடுக்க ரூ.77 லட்சத்தில் திட்டம் தீர்ப்பாயத்தில் செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை மீட்டெடுக்க ரூ.77 லட்சத்தில் திட்டம் தீர்ப்பாயத்தில் செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை
மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை மீட்டெடுக்க ரூ.77 லட்சத்தில் திட்டம் தீர்ப்பாயத்தில் செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை
மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை மீட்டெடுக்க ரூ.77 லட்சத்தில் திட்டம் தீர்ப்பாயத்தில் செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை
மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை மீட்டெடுக்க ரூ.77 லட்சத்தில் திட்டம் தீர்ப்பாயத்தில் செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை
ADDED : செப் 23, 2025 10:38 PM
சென்னை:சாலை விரிவாக்கத்திற்காக துார்க்கப்பட்ட, மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க, 77 லட்சம் ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், செங்கல்பட்டு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் உள்ள சோழிபொய்கை குளம், கடந்த 2018ல், 50 லட்சம் ரூபாயில் துார் வாரப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணியை மேற்கொண்டு வரும் நெடுஞ்சாலை துறை, சோழிபொய்கை குளத்தில் மண் கொட்டி, துார்த்து சாலை அமைத்து வருகிறது.
நெடுஞ்சாலைகள் அமைக்கும் போது ஏரி, குளங்களுக்கு பாதிப்பில்லாமல் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, சோழிபொய்கை குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் என, மல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, செங்கல்பட்டு கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை:
மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள சோழிபொய்கை குளம், நன்னீர் குளமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து, ஐந்து மதகுகள் வாயிலாக, பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலை எனும் இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்காக, இக்குளத்தின் ஒரு பகுதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயன்படுத்தியுள்ளதாக, மல்லை நீர்நிலை பாதுகாப்போர் சங்கம் கூறியுள்ளது.
தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, இக்குளத்தை ஆழப்படுத்தி, நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க, வண்டல் மண்ணை அள்ள வேண்டும் என, மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரியும், நீர்வளத் துறை நிர்வாக பொறியாளரும் தெரிவித்துள்ளனர்.
சோழிபொய்கை குளத்தை, 1.60 மீட்டர் ஆழப்படுத்தி, பழைய நிலைக்கு மீட்டெடுக்க, 77 லட்சம் ரூபாய் தேவைப்படும் என, நீர்வளத் துறை நிர்வாகப் பொறியாளரும் தெரிவித்துள்ளார். அதன்படி, சோழிபொய்கை குளத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.