/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சத்திரம்பேட்டை சாலை பணி துவக்கம் 30 ஆண்டுகளுக்கு பின் விமோசனம் சத்திரம்பேட்டை சாலை பணி துவக்கம் 30 ஆண்டுகளுக்கு பின் விமோசனம்
சத்திரம்பேட்டை சாலை பணி துவக்கம் 30 ஆண்டுகளுக்கு பின் விமோசனம்
சத்திரம்பேட்டை சாலை பணி துவக்கம் 30 ஆண்டுகளுக்கு பின் விமோசனம்
சத்திரம்பேட்டை சாலை பணி துவக்கம் 30 ஆண்டுகளுக்கு பின் விமோசனம்
ADDED : ஜூன் 05, 2025 01:56 AM

கூவத்துார்:சத்திரம்பேட்டையில், 30 ஆண்டுகளாக சாலை வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறை பொது நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாயில், புதிய சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
கூவத்துார் அருகே சத்திரம்பேட்டையில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஜல்லி கொட்டி, இங்கு மண்பாதை அமைக்கப்பட்டது. நாளடைவில் பராமரிப்பின்றி, இச்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டன.
இதனால், கோடை காலத்தில் சாலையில் புழுதி பறப்பதாலும், மழைக்காலத்தில் சாலை சகதியாக மாறுவதாலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை பொதுநிதியில் இருந்து 270 மீட்டர் நீளத்திற்கு, 15 லட்சம் ரூபாயில் புதிய சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.