ADDED : ஜன 04, 2024 09:46 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், இளம்பெண்ணிடம் செயினை பறித்துச்சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மனைவி பிரவீனா, 29. இவர், நேற்று வீட்டின் அருகில், கடைக்குச் செல்வதற்காக சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், பிரவீனா கழுத்திலிருந்த மூன்று சவரன் செயினை பறித்துச் சென்றனர். பிரவீனா, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.