/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மத்திய அரசு நலத்திட்டங்கள் ஆப்பூர் கிராமத்தில் முகாம்மத்திய அரசு நலத்திட்டங்கள் ஆப்பூர் கிராமத்தில் முகாம்
மத்திய அரசு நலத்திட்டங்கள் ஆப்பூர் கிராமத்தில் முகாம்
மத்திய அரசு நலத்திட்டங்கள் ஆப்பூர் கிராமத்தில் முகாம்
மத்திய அரசு நலத்திட்டங்கள் ஆப்பூர் கிராமத்தில் முகாம்
ADDED : ஜன 10, 2024 07:41 PM
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கான, 'நமது லட்சியம் - வளர்ச்சி அடைந்த பாரதம்' திட்டத்தின் சிறப்பு முகாம், நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஆப்பூர் ஊராட்சி தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் இணை செயலர் செந்தில் பாண்டியன் பங்கேற்று, பல்வேறு துறைகளில் உள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.
அஞ்சல் துறை மற்றும் வங்கிகள் சார்பாக, கிராமப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். அப்போது, நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், புதிய அஞ்சலக கணக்குகள் துவங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் சித்தார்த், அஞ்சல் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ராமமூர்த்தி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.