/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கலையரங்கம் கட்டுமானத்தை இடித்த 25 பேர் மீது வழக்கு கலையரங்கம் கட்டுமானத்தை இடித்த 25 பேர் மீது வழக்கு
கலையரங்கம் கட்டுமானத்தை இடித்த 25 பேர் மீது வழக்கு
கலையரங்கம் கட்டுமானத்தை இடித்த 25 பேர் மீது வழக்கு
கலையரங்கம் கட்டுமானத்தை இடித்த 25 பேர் மீது வழக்கு
ADDED : செப் 22, 2025 10:32 PM
சித்தாமூர்:போந்துார் ஊராட்சியில், கலையரங்கம் கட்டுமானத்தை இடித்து அகற்றிய 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சித்தாமூர் அருகே போந்துார் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, 6 லட்சம் ரூபாயில், கலையரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் அருகே உள்ள இடத்தில் கலையரங்கம் கட்ட வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
ஆனால், கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்தில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கடந்த 12ம் தேதி கலையரங்கம் கட்டுமானத்தை இடித்து அகற்றினர்.
இதுகுறித்து, சித்தாமூர் காவல் நிலையத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புள்ள 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.