Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்

ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்

ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்

ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்

ADDED : மே 31, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
சென்னை:தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, சில தினங்களுக்கு முன் விமானம் ஒன்று சென்னை வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அங்கு சுற்றுலா சென்று திரும்பிய, சென்னை பயணியின் லக்கேஜ்ஜில் என்ன உள்ளது என கேட்டதற்கு, வீட்டிற்கு தேவையான உணவு பொருள் என தெரிவித்துள்ளார்.

அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், லக்கேஜை பிரித்து பார்த்ததில் உயர்ரக கஞ்சா 5 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 5 கோடி ரூபாய்.

அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். கடந்த சில தினங்களில் மட்டும், 6 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த சில மாதங்களாக கடத்தல் குறித்த எந்த விபரங்களையும் வெளியிடுவதில்லை. விமான நிலைய முதன்மை கமிஷனர் தமிழ்வளவன் இது குறித்து கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது.

ரூ.4 கோடி மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு


செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் என்ற பகுதியில், சட்ட ரீதியாக போதை பொருட்களை எரிக்கும் ஆலை உள்ளது. அங்கு மாநில அமலாக்கம் மற்றும் போதை பொருள் நுண்ணறிவு கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் தலைமையில் நேற்று, போதை பொருள் கடத்தல் தொடர்பாக, 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3,510 கிலோ கஞ்சா, 239 கிலோ கஞ்சா சாக்லெட், 860 கிராம் மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் எரித்து அழித்தனர்.
உடன், தமிழ்நாடு தடய அறிவியல் பிரிவு உதவி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். போலீசார் கூறுகையில்,' இந்த ஆண்டில், இதுவரை, போதை பொருள் கடத்தல் தொடர்பாக, 355 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 7,139 கிலோ கஞ்சா, ஒரு கிலோ ஹெராயின், 241 கிலோ கஞ்சா சாக்லெட் உள்ளிட்ட போதை பொருள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன' என்றனர்.அதேபோல, ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில், ஆவடி கூடுதல் கமிஷனர் பவனீஸ்வரி முன்னிலையில், செங்கல்பட்டு, தென்மேல்பாக்கம் பகுதியில் வைத்து நேற்று, 70 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us