/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 27, 2025 08:02 PM
செங்கல்பட்டு, மே 28-
செங்கல்பட்டு, பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, பெரும்பாக்கம் ஆகிய பகுதியில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இந்நிலையங்களில், 2025ம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
இச்சேர்க்கைக்கு எட்டாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், வரும் ஜூன் 13ம் தேதி வரை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரம் அறிந்துகொள்ள 94990 55673 அல்லது 99629 86696 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர், பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஆகியோரிரை நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.