ADDED : ஜூன் 29, 2025 10:26 PM
தாம்பரம்:முடிச்சூர் ஏரியில் குளித்த சிறுவன், நீரில் மூழ்கி பலியானான்.
தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், புத்தர் நகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் ஹரிஹரன்,14. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
ஹரிஹரன், நேற்று தன் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, முடிச்சூர் ஏரியில் குளித்துள்ளார். அப்போது, ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், இறந்த நிலையில் ஹரிஹரன் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.