ADDED : செப் 21, 2025 11:06 PM
ஓட்டேரி;ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 40. இவரது பைக், நேற்று முன்தினம் இரவு திருடு போனது.
இது குறித்து, விசாரித்த தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார், பைக்கை திருடிய ஓட்டேரி, தாசமகான் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 20 மற்றும் பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவனை கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிரகாஷை சிறையிலும், சிறுவனை சிறார் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். பைக் பறிமுதல் செய்யப்பட்டது.