/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மெக்கானிக் கடையில் 'பைக்'குகள் தீக்கிரை மெக்கானிக் கடையில் 'பைக்'குகள் தீக்கிரை
மெக்கானிக் கடையில் 'பைக்'குகள் தீக்கிரை
மெக்கானிக் கடையில் 'பைக்'குகள் தீக்கிரை
மெக்கானிக் கடையில் 'பைக்'குகள் தீக்கிரை
ADDED : ஜூன் 27, 2025 12:56 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 27.
இவர், செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில், வாடகை கட்டடத்தில் பைக்குகள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மேல்மலையனுார் கோவிலுக்குச் சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில், கடையில் பழுது நீக்கம் செய்ய நிறுத்தி வைத்திருந்த ராயல் என்பீல்டு, பஜாஜ் பல்சர் உள்ளிட்ட, 13 பைக்குகள் தீப்பற்றி எரிந்துள்ளன.
இதைப் பார்த்த அங்கிருந்தோர், செங்கல்பட்டு தீயணைப்பு நிலையம் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.