/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/திருமுக்காடு ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜைதிருமுக்காடு ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை
திருமுக்காடு ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை
திருமுக்காடு ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை
திருமுக்காடு ஊராட்சியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை
ADDED : பிப் 24, 2024 01:30 AM
மதுராந்தகம்,:திருமுக்காடு ஊராட்சி பழைய காலனி பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கின்றனர்.
நீண்ட துாரம் நடந்து சென்று, உத்தமநல்லுார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வந்தனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, இப்பகுதியில் தனியாக நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 12.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புதிதாக நியாய விலைக் கடை அமைப்பதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது.
இதில், திருமுக்காடு ஊராட்சி தலைவர் பெருமாள், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.