/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வேளாண் வணிக கண்காட்சி கல்பாக்கத்தில் விழிப்புணர்வுவேளாண் வணிக கண்காட்சி கல்பாக்கத்தில் விழிப்புணர்வு
வேளாண் வணிக கண்காட்சி கல்பாக்கத்தில் விழிப்புணர்வு
வேளாண் வணிக கண்காட்சி கல்பாக்கத்தில் விழிப்புணர்வு
வேளாண் வணிக கண்காட்சி கல்பாக்கத்தில் விழிப்புணர்வு
ADDED : ஜன 06, 2024 11:29 PM

கல்பாக்கம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் பாரம்பரிய அரிசி வகைகள், தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை விளைவித்து வருகின்றனர்.
அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து, விவசாயிகளும், நுகர்வோரும் பயன்பெற சந்தைப்படுத்தும் வாய்ப்பு குறைவு.
அவர்களின் பொருட்கள் குறித்து, கல்பாக்கம் அணுசக்தி துறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சந்தைப்படுத்த முடிவெடுத்தனர்.
இதற்காக, செங்கல்பட்டு மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, சென்னை மகசூல் அறக்கட்டளையுடன் இணைந்து, கல்பாக்கம் பகுதியில் முதன்முறையாக, வேளாண் வணிக கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவை நேற்று நடத்தியது.
'நெஸ்கோ' அரங்கில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர், வேளாண்மை சார்பு தொழில் முனைவோர்கள் பால் பொருட்கள், சிறுதானியங்கள், மாவு பொருட்கள், பாரம்பரிய உணவுகள், இயற்கை முறை விளைவிப்பு காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தினர்.
மேலும், விவசாயிகள் விளைவித்த பொருட்களை மதிப்புகூட்டி விலை குறைவாக, தரமாக அளிப்பது, அவற்றை வாங்குவதன் மூலம், விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆதரவு அளிப்பது, நுகர்வோர் அடையும் லாபம், பயன்கள் குறித்து, அணுசக்தி துறை நகரிய பகுதியினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நுகர்வோரும் பார்வையிட்டு, விரும்பியவற்றை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதில், வேளாண் வணிக துணை இயக்குனர் ரவிகுமார், பிரதமரின் சிறு, குறு தொழில்கள் முறைப்படுத்தல், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்.
உலக வங்கி நிதியில் செயல்படுத்தும் நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில், புதிய தொழில் திட்டத்திற்கு, 40 சதவீத மானியம், பழைய தொழில் திட்டத்திற்கு, 50 சதவீத மானியம் உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.
இதில், வேளாண் வணிக அலுவலர்கள், மகசூல் அறக்கட்டளையினர், 'நெஸ்கோ' நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.