/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு தொழிற்பயிற்சி படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு அரசு தொழிற்பயிற்சி படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு தொழிற்பயிற்சி படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு தொழிற்பயிற்சி படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு தொழிற்பயிற்சி படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 03, 2025 07:44 PM
சென்னை:கிண்டி அரசு தொழிற்பயிற்சி படிப்புகளில் சேர, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கே.சசிதரன் வெளியிட்ட அறிக்கை:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, www.skilltraining.tn.gov.in வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், இயந்திர பட வரைவாளர், உணவு தயாரிப்பாளர், ஸ்மார்ட் போன் டெக்னீஷியன் மற்றும் ஆப் டெஸ்டர் உள்ளிட்ட, 17 படிப்புகளில் சேரலாம்.
மேலும், எட்டாம் வகுப்பு படித்தவர்கள், இரண்டு வருட ஒயர்மேன் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்புகளில் சேருவோருக்கு, பாடப்புத்தகம், இலவச பஸ் பாஸ், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடைகள், தையல் கூலி உட்பட விலையில்லா காலணிகள், இலவச அடையாள அட்டை உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
பயிற்சி கட்டணமாக, ஆண்டுக்கு 250 ரூபாய் செலுத்த வேண்டும். அதே நேரம், பயிற்சியில் சேருவோருக்கு, ஆண்களுக்கு 750 ரூபாய், பெண்களுக்கு 1,000 ரூபாய் மாத உதவி தொகையாக வழங்கப்படும்.
பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மேலும் விபரங்களுக்கு, 94444 75940, 89394 90755 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.