/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பயிர் பரிசோதனை பணியாளரை நியமிக்க விண்ணப்பம் பயிர் பரிசோதனை பணியாளரை நியமிக்க விண்ணப்பம்
பயிர் பரிசோதனை பணியாளரை நியமிக்க விண்ணப்பம்
பயிர் பரிசோதனை பணியாளரை நியமிக்க விண்ணப்பம்
பயிர் பரிசோதனை பணியாளரை நியமிக்க விண்ணப்பம்
ADDED : ஜூன் 13, 2025 09:36 PM
செங்கல்பட்டு:பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்களை நியமிக்க, தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள, பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இவர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, பணி நியமன முகமை எனும் ஏஜென்சிகளிடம் இருந்து ஒப்பந்த புள்ளிகள் கோரப்படுகிறது.
குறைந்தபட்சம் அந்த முகமை, மூன்றாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்களுக்கு, மாதாந்திர தொகுப்பூதியமாக 15,050 ரூபாய் வழங்க வேண்டும்.
ஒப்பந்தம் பெற, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், மூன்றாம் தளம் 'ஏ பிளாக்'கில் உள்ள, வேளாண்மை இணை இயக்குநருக்கு, வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முகமை, உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும்.