Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ விலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை

விலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை

விலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை

விலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை

ADDED : ஜூன் 16, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:திருப்போரூர் -- திருக்கழுக்குன்றம் சாலை, 22 கி.மீ., தூரம் உள்ளது. இச்சாலை இடையே சிறுதாவூர், ஆமூர், மானாமதி, ஆமையாம்பட்டு, எச்சூர், கொத்திமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

இதில், 10 கிலோ மீட்டர் சாலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இச்சாலை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் மற்றும் வேலைக்கு செல்வோரும் செல்கின்றனர்.

வனத்துறையினர் எதிர்ப்பால், இந்த சாலை சீரமைப்பு பணி கிடப்பில் இருந்து வந்தது.

இதனால், திருப்போரூர் முதல் சிறுதாவூர் வரை, 6 கி.மீ., சாலையை கடக்கும் இரு சக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள், அங்குள்ள பள்ளங்களால் அவ்வப்போது விபத்தில் சிக்கி வந்தன.

இந்த சாலையில், ஐந்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், 10க்கும் மேற்பட்ட விபத்துகளும் நடந்து இருக்கின்றன.

மழைக்காலத்தின் போது, சாலையில் உள்ள சிறிய பள்ளங்கள் முதல், பெரிய பள்ளங்கள் வரை தேங்கும் மழை நீரால், சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டன.

பள்ளங்கள் எங்கு உள்ளன என்று தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்தனர்.

திருப்போரூர், செம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை நம்பி, திருப்போரூர் -திருக்கழுக்குன்றம் சாலை ஒட்டி அமைந்துள்ள கிராம மக்கள் உள்ளதால் சிகிச்சைக்காக கொண்டுசெல்லும் நேரத்தில், ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் வழி கொடுத்தாலும், சாலையில் காணப்படும் பள்ளங்களாலும், குழிகளாலும் இடையூறு ஏற்படுகிறது.

இவ்வாறாக காணப்பட்ட வனப்பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் அனைத்து துறைகளுக்கும் கோரிக்கை வைத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை மூலம், 28 கோடி ரூபாய் மதிப்பில், திருப்போரூர் முதல் மானாமதி வரை, 10 கி.மீ., புதிய சாலை அமைக்க முடிவானது.

தொடர்ந்து 2024 ம் ஆண்டு பணி துவங்கியது. இதில், சாலை பள்ளம், மேடுகள் சமன் செய்தல், சாலையோர முட்செடிகள் அகற்றி அகலப்படுத்துதல், தார் போடுதல், புதிய சாலைக்கு வழிகாட்டி பலகை, வெள்ளை கோடு அமைத்தல் என அனைத்து பணிகளும் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்து, புதிய சாலையாக மேம்படுத்தப்பட்டது.

புதிய சாலையில் வாகனங்கள் வேகமாக செல்ல வாய்ப்பு இருப்பதால் வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வண்ண விழிப்புணர்வு பதாகை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி சாலை இருபுறமும் மயில், மான், குரங்கு என வன விலங்குகள் குறித்த விழிப்புணர்வு வண்ணபதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை வாகன ஓட்டிகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us