/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இடைக்கழிநாட்டில் நாளை அ.தி.மு.க., முப்பெரும் விழா இடைக்கழிநாட்டில் நாளை அ.தி.மு.க., முப்பெரும் விழா
இடைக்கழிநாட்டில் நாளை அ.தி.மு.க., முப்பெரும் விழா
இடைக்கழிநாட்டில் நாளை அ.தி.மு.க., முப்பெரும் விழா
இடைக்கழிநாட்டில் நாளை அ.தி.மு.க., முப்பெரும் விழா
ADDED : ஜூன் 15, 2025 02:18 AM
இடைக்கழிநாடு,:இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கப்பிவாக்கம் கிராமத்தை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட ஜெ., பேரவை துணைச்செயலர் புளோரா குப்புசாமி இல்ல திருமண விழா நாளை 16ம் தேதி காலை 10:00 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை கோட்டைகாடில் உள்ள ஜி.வி., திடலில் நடக்கிறது.
இதில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். விழாவில் 90 அடி உயர கம்பத்தில் கட்சி கொடி ஏற்றுதல், 300க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.,வில் இணைப்பு என, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகம் தலைமையில் முப்பெரும் விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-----------------