/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவு செங்கையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவு
செங்கையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவு
செங்கையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவு
செங்கையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 19, 2025 12:37 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், குடிசை வீடு மற்றும் ஓட்டு வீடுகள் கடந்த ஆண்டு கணக்கெடுக்கப்பட்டன. அதன் பின், மாவட்டம் முழுதும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், 3,900 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம், பொன்விளைந்தகளத்துார், பொன்பதர்கூடம், நல்லாத்துார், நடுவக்கரை ஆகிய ஊராட்சியில், கலைஞர் கனவு இல்ல வீடு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின், கலைஞர் கனவு இல்ல வீடுகள் மற்றும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.