Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கடனை திருப்பி தராததால் நண்பனை தீர்த்து கட்டிய வாலிபர் போலீசில் சரண்

கடனை திருப்பி தராததால் நண்பனை தீர்த்து கட்டிய வாலிபர் போலீசில் சரண்

கடனை திருப்பி தராததால் நண்பனை தீர்த்து கட்டிய வாலிபர் போலீசில் சரண்

கடனை திருப்பி தராததால் நண்பனை தீர்த்து கட்டிய வாலிபர் போலீசில் சரண்

ADDED : மே 24, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத், 30, செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் சென்தாமஸ்மவுண்ட், பட்ரோடு பகுதியை சேர்ந்த சரவணன், 35.என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர்.

சரவணன் சொந்தமாக கார் ஓட்டி வருகிறார். நட்பின் அடிப்படையில் சரவணனிடம் வினோத் அடிக்கடி கடன் பெற்று பல லட்சங்களாக மாறி உள்ளது. சரவணன் கடனை கேட்கும் போது வினோத் திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு சரவணன் அவரது நண்பர்கள் இருவர் மற்றும் வினோத் சிங்கபெருமாள் கோவில் அருகில் காரில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து வினோத்தை கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளனர். அதன் பின் வினோத்தின் உடலை புலிப்பாக்கத்தில் கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளத்தில் உள்ள தண்ணீரில் வீசி விட்டு தப்பிச் சென்றனர். நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டு தாலுகா போலீசில் சரவணன் சரணடைந்தார்.

இதையடுத்து செங்கல்பட்டு தாலுகா மற்றும் பாலுார் போலீசாரால் புலிப்பாக்கம் கல்குவாரி இடம் அடையாளம் காட்டப்பட்டு மகேந்திரா சிட்டி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி வினோத் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணன் அளித்த தகவலின்படி, சிங்க பெருமாள் கோவில் அடுத்த பாரேரி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 35.பார்த்திபன், 36 இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us