/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/விஷ பூச்சி கடித்து வாலிபர் உயிரிழப்புவிஷ பூச்சி கடித்து வாலிபர் உயிரிழப்பு
விஷ பூச்சி கடித்து வாலிபர் உயிரிழப்பு
விஷ பூச்சி கடித்து வாலிபர் உயிரிழப்பு
விஷ பூச்சி கடித்து வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜன 02, 2024 10:49 PM
செங்கல்பட்டு:திருப்போரூர் அடுத்த மானாமதி அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம், 38. இவருக்கு திருமணமாகி நதியா என்ற மனைவி உள்ளார்.
இவர், கடந்த 29ம் தேதி செங்கல்பட்டு அருகில் அழகு சமுத்திரம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். மாலை 5:30 மணிக்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச ஏரிக்கரை மீது நடந்து சென்றுள்ளார்.
அப்போது, விஷப்பூச்சி கடித்ததில் சண்முகம் மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.