/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/அனுமந்தபுரம் சாலையில் பள்ளம் தொடரும் போக்குவரத்து நெரிசல்அனுமந்தபுரம் சாலையில் பள்ளம் தொடரும் போக்குவரத்து நெரிசல்
அனுமந்தபுரம் சாலையில் பள்ளம் தொடரும் போக்குவரத்து நெரிசல்
அனுமந்தபுரம் சாலையில் பள்ளம் தொடரும் போக்குவரத்து நெரிசல்
அனுமந்தபுரம் சாலையில் பள்ளம் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : பிப் 24, 2024 01:29 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பஜார் வீதியின் இருபுறமும், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள், இரு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. மேலும், பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவிலும் உள்ளது.
கோவில் மற்றும் மருத்துவமனைகளுக்கு வருவோர், தங்களின் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்களை சாலை ஓரம் நிறுத்தி செல்கின்றனர்.
இதன் காரணமாக, மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன.
கோவில் நுழைவு பகுதியில், சாலையில் கழிவு நீர் கால்வாயில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால், வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்ல தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில், முறையான பார்க்கிங் வசதி இல்லாததால், சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது, பல ஆண்டுகளாக தொடர்கிறது.
மேலும், தற்போது கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெறுவதால், மாலை வேளையில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இவற்றை தடுக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாலை நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால், அனுமந்தபுரத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்களை, அருகில் உள்ள மண்டபத்தெரு வழியாக மாற்றிவிட்டால், போக்கு வரத்து நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த பள்ளத்தை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.