/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பல டன் எடையில் ராட்சத பேனர் வண்டலுார் தாங்கல் ஏரியில் அடாவடி பல டன் எடையில் ராட்சத பேனர் வண்டலுார் தாங்கல் ஏரியில் அடாவடி
பல டன் எடையில் ராட்சத பேனர் வண்டலுார் தாங்கல் ஏரியில் அடாவடி
பல டன் எடையில் ராட்சத பேனர் வண்டலுார் தாங்கல் ஏரியில் அடாவடி
பல டன் எடையில் ராட்சத பேனர் வண்டலுார் தாங்கல் ஏரியில் அடாவடி
ADDED : ஜூலை 02, 2025 02:17 AM

வண்டலுார்,:வண்டலுார், தாங்கல் ஏரியில் வைக்கப்பட்டுள்ள, ராட்சத விளம்பர பேனரை அகற்றாமல், தொடர்ந்து அடாவடி செய்வதாக, பகுதிவாசிகள் புகார் எழுப்பி உள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையோரம் தாங்கல் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் ஒரு பகுதியில், பல டன் எடையிலான இரும்பு சட்டங்கள் உள்ள கட்டமைப்பில், ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.
நம் நாளிதழில் தொடர் செய்தி வெளியானதன் எதிரொலியாக, கடந்த மாதம் பேனர் அகற்றப்பட்டது.
இந்நிலையில், அதே இரும்பு சட்டத்தில் தற்போது, புதிய விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஏரி அருகே, நீர் பிடிப்பு பகுதியில், பல டன் எடையில் வைக்கப்பட்டுள்ள இந்த ராட்சத விளம்பர பேனர், காற்றில் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளது.
தவிர, அடிப்பகுதியில் உறுதித் தன்மை இழந்துள்ளதால், கீழே விழும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் சென்னை வில்லிவாக்கம், பல்லாவரம் ரேடியல் சாலை, கேளம்பாக்கம் பிரதான சாலை ஆகிய இடங்களில், விளம்பர பேனர்கள் சரிந்து விழுந்து, இருவர் படுகாயம் அடைந்தனர்.
இதுபோன்று அசம்பாவிதம் நடக்கும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், வண்டலுார் தாங்கல் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், அதை தாங்கும் இரும்பு சட்டங்களையும் முழுமையாக அகற்ற வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.