/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஒரே நாளில் 54 திருமணங்கள் கந்தசுவாமி கோவிலில் நெரிசல்ஒரே நாளில் 54 திருமணங்கள் கந்தசுவாமி கோவிலில் நெரிசல்
ஒரே நாளில் 54 திருமணங்கள் கந்தசுவாமி கோவிலில் நெரிசல்
ஒரே நாளில் 54 திருமணங்கள் கந்தசுவாமி கோவிலில் நெரிசல்
ஒரே நாளில் 54 திருமணங்கள் கந்தசுவாமி கோவிலில் நெரிசல்
ADDED : பிப் 11, 2024 11:59 PM

திருப்போரூர் : சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. நேற்று, சுபமுகூர்த்த நாள் என்பதால், கோவிலில் திரு மணம் செய்ய, 32 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
மேலும், வேண்டு தலின் காரணமாக முன்பதிவு செய்யாமல் பலரும் திருமணம் செய்ய வந்திருந்தனர்.
அதனால், கோவிலில் நெரிசல் ஏற்பட்டது.கோவிலுக்கு வந்தவர்கள் பலரும், தங்களது வாகனங்களை கோவிலை சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளில் நிறுத்தி விட்டு சென்றனர்.
மாடவீதிகளில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்களில் வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாததால், திருமணங்களுக்கு வந்தவர்களும் தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றனர்.
அதனால், ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் நான்கு மாடவீதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்போரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தோரும், திருமணம் முடித்து கந்தசுவாமி கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர்.
நேற்று, ஒரே நாளில் மட்டும், 10,000க்கும் மேற்பட்டோர் வந்திருக்கலாம் என, அப்பகுதிவாசிகள் கூறினர்.