/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மக்கள் நீதிமன்றத்தில் 4,917 வழக்கிற்கு தீர்வு மக்கள் நீதிமன்றத்தில் 4,917 வழக்கிற்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 4,917 வழக்கிற்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 4,917 வழக்கிற்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 4,917 வழக்கிற்கு தீர்வு
ADDED : செப் 14, 2025 02:08 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 4,917 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
செங்கல்பட்டு, காஞ்சி புரம் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் தேங்கியுள்ள மற்றும் பதிவு செய்யப்படாத வழக்குகளை சமரசமாக முடிக்க, தேசிய மக்கள் நீதிமன்றம் முடிவெடுத்தது.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் உள்ள மாற்று முறை தீர்வு மைய வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம், நேற்று நடந்தது.
இதில் மகிளா நீதிபதி எழிலரசி, கூடுதல் சார்பு நீதிபதி ரம்யா, கூடுதல் சார்பு நீதிபதி தமிழ் செல்வி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில், வழக்கு களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மாவட்டங்களில் அனைத்து நீதிமன்றங்களில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில், குடும்ப நல வழக்குகள், குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வழக்குள் என, 7,119 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.
இதில், 4,917 வழக்கில், 25 கோடியே 38 லட்சத்து 52,665 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.