/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 'உங்களுடன் ஸ்டாலின் முகாம் மதுராந்தகத்தில் 300 மனுக்கள்' 'உங்களுடன் ஸ்டாலின் முகாம் மதுராந்தகத்தில் 300 மனுக்கள்'
'உங்களுடன் ஸ்டாலின் முகாம் மதுராந்தகத்தில் 300 மனுக்கள்'
'உங்களுடன் ஸ்டாலின் முகாம் மதுராந்தகத்தில் 300 மனுக்கள்'
'உங்களுடன் ஸ்டாலின் முகாம் மதுராந்தகத்தில் 300 மனுக்கள்'
ADDED : செப் 16, 2025 11:52 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது.
மதுராந்தகம் நகராட்சி கமிஷனர் அபர்ணா மற்றும் நகராட்சி தலைவர் மலர்விழி தலைமை தாங்கினர்.
நகராட்சிக்கு உட்பட்ட 10, 12 மற்றும் 15வது வார்டு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் முகாம் நடந்தது.
இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.
வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை, மக்கள் மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.
நேற்று, நடந்த முகாமில், 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.