/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பைக் - வேன் மோதி 3 வயது குழந்தை பலிபைக் - வேன் மோதி 3 வயது குழந்தை பலி
பைக் - வேன் மோதி 3 வயது குழந்தை பலி
பைக் - வேன் மோதி 3 வயது குழந்தை பலி
பைக் - வேன் மோதி 3 வயது குழந்தை பலி
ADDED : ஜன 07, 2024 12:23 AM
திருப்போரூர்:இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதிய விபத்தில் மூன்று வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் சுகிலன், 33. இவர், மகள் ஜெர்லின் ஜாய், 3, மற்றும் அவர் நண்பருடன் இருசக்கர வாகனத்தில், நேற்று மாலை நெல்லிக்குப்பம்- - கொண்டங்கி சாலையில் சென்றார்.
அப்போது, பின்னால் வந்த மினி லோடு வேன் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் கீழே விழுந்தனர்.
இதில், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தது. சுகிலனுக்கு காலிலும், அவர் நண்பருக்கு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.