Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஒரே நாளில் 3 பேர் கொலை செங்கையில் பயங்கரம்

ஒரே நாளில் 3 பேர் கொலை செங்கையில் பயங்கரம்

ஒரே நாளில் 3 பேர் கொலை செங்கையில் பயங்கரம்

ஒரே நாளில் 3 பேர் கொலை செங்கையில் பயங்கரம்

ADDED : மே 12, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் விமல், 21. இவரது நண்பர் ஜெகதீசன், 21. இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இருவரும் காந்தி நகர் மெயின்ரோடு அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.

இதில் விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார் வெட்டு காயங்களுடன் கிடந்த ஜெகதீசனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று காலை உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:

விமலுக்கும் அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் அவரது உறவினர் மணிமேகலை என்ற திருநங்கைக்கும் 20 நாட்களுக்கு முன் கழிவு நீர் குழாய் பதிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த நித்திஷ் என்ற நபருடன் ஏற்பட்ட தகராறில் விமலும், ஜெகதீசனும் நித்திஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி உள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த நிந்தீஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் காந்திநகர் மெயின்ரோடு வழியாக வந்தபோது விமல் மற்றும் ஜெகதீசன் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருநங்கை மணிமேகலை உட்பட எட்டு பேரை தேடி வருகின்றோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

மதுராந்தகம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புதுப்பட்டு கிராமம், மலை மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகேஷ், 25. நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணிக்கு, லோகேஷ், மலை மேட்டு தெருவை சேர்ந்த உதயா, 24, திவாகர், 23, ஆகியோர் புதுப்பட்டு பயணியர் நிழற்குடை அருகே மது அருந்தினர்.

அப்போது, அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில், உதயா மற்றும் திவாகர் ஆகியோர், இரும்பு ராடு மற்றும் கத்தியால் லோகேைஷ சரமாரியாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் உயிரிழந்தார்.

மதுராந்தகம் போலீசார், லோகேஷ் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us