/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/துப்பாக்கி சுடும் போட்டி செங்கைக்கு 3 பதக்கம்துப்பாக்கி சுடும் போட்டி செங்கைக்கு 3 பதக்கம்
துப்பாக்கி சுடும் போட்டி செங்கைக்கு 3 பதக்கம்
துப்பாக்கி சுடும் போட்டி செங்கைக்கு 3 பதக்கம்
துப்பாக்கி சுடும் போட்டி செங்கைக்கு 3 பதக்கம்
ADDED : பிப் 06, 2024 04:47 AM

செங்கல்பட்டு : உத்தர பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில், ஐ.ஜி.எப்., தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், துப்பாக்கி சுடும் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில், செங்கல்பட்டைச் சேர்ந்த வீரர்கள் கிருஷ்ணகுமார், சுரேஷ் ஆனந்த், பிரசாந்த் ஆகியோர், தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர்.
இதுகுறித்து, ஏர்கன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தலைமை பயிற்சியாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில், “துப்பாக்கி சுடும் போட்டியில், கடந்த 10 மாதங்களாக உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். பதக்கம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
மேலும், “செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏர்கன் பயிற்சி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த பயிற்சியை அனைவருக்கும் வழங்க உள்ளேன்” என்றார்.