/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/யோகாசனத்தில் 200 மாணவர்கள் சாதனை பத்ம விருச்சிகாசனத்தில் அசத்திய சிறுமியோகாசனத்தில் 200 மாணவர்கள் சாதனை பத்ம விருச்சிகாசனத்தில் அசத்திய சிறுமி
யோகாசனத்தில் 200 மாணவர்கள் சாதனை பத்ம விருச்சிகாசனத்தில் அசத்திய சிறுமி
யோகாசனத்தில் 200 மாணவர்கள் சாதனை பத்ம விருச்சிகாசனத்தில் அசத்திய சிறுமி
யோகாசனத்தில் 200 மாணவர்கள் சாதனை பத்ம விருச்சிகாசனத்தில் அசத்திய சிறுமி
ADDED : பிப் 06, 2024 05:37 AM

சென்னை, : 'சர்வாங்காசனம்' உள்ளிட்ட மூன்று யோகாசனத்தில், மாணவ - மாணவியர் சாதனை படைத்து அசத்தினர்.
தாம்பரம், போரூர் பகுதியில் இயங்கும் ஆண்டியப்பன் யோகா அகாடமி சார்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு, யோகாசனத்தில் உலக சாதனை நிகழ்வு, கிழக்கு தாம்பரம் சங்கர வித்யாலயா பள்ளியில் நடந்தது.
இதில், மேற்கு தாம்பரம் சான் அகாடமி, அசோக் நகர் எம்.ஏ.கே., பள்ளி, சிட்லபாக்கம் என்.எஸ்.என்., பள்ளி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
நிகழ்வில், 127 பேர், ஒரே நேரத்தில், 'சர்வாங்காசனம்' எனும் ஆசனத்தை, 50 வினாடிகள் செய்து, உலக சாதனை படைத்தனர். அதேபோல், 55 பேர், 35 வினாடிகளில் 'சக்கரபந்தாசனம்' செய்தனர். ஆறு பேர், 'கந்தபிருடாசனம்' எனும் ஆசனத்தை, 35 வினாடிகள் செய்து, உலக சாதனை படைத்தனர். இவர்களை தவிர, சிட்லபாக்கம் என்.எஸ்.என்., பள்ளியின் மாணவி ஜெயதுர்கா, தனியாக பத்ம விருச்சிகாசனத்தை, 2 நிமிடம், 4 வினாடி செய்து, சாதனை படைத்து அசத்தினார்.
சாதனையை, 'நோவா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' எடிட்டர் ராஜ்குமார், இயக்குனர் திலீபன், மாநில நடுவர் நவீன்ராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.