/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்காட்டில் 18 சவரன் நகை திருட்டுசெங்காட்டில் 18 சவரன் நகை திருட்டு
செங்காட்டில் 18 சவரன் நகை திருட்டு
செங்காட்டில் 18 சவரன் நகை திருட்டு
செங்காட்டில் 18 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 02, 2024 10:54 PM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், இள்ளலுார் ஊராட்சிக்கு உட்பட்ட செங்காடு கிராமத்தில் வசிப்பவர் ஏழுமலை, 50. இவரது மனைவி எல்லம்மாள்.
இருவரும் காலவாக்கம் தனியார் கல்லுாரியில் தோட்ட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. மற்றொருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை 8:00 மணிக்கு, அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை 6:00 மணிக்கு தம்பதி வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த செயின், கம்மல் உட்பட, 18 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏழுமலை திருப்போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.