/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிறுதாவூர் உயர்நிலை பள்ளி அமைக்க 1.42 ஏக்கர் இடம் வகை மாற்றம் சிறுதாவூர் உயர்நிலை பள்ளி அமைக்க 1.42 ஏக்கர் இடம் வகை மாற்றம்
சிறுதாவூர் உயர்நிலை பள்ளி அமைக்க 1.42 ஏக்கர் இடம் வகை மாற்றம்
சிறுதாவூர் உயர்நிலை பள்ளி அமைக்க 1.42 ஏக்கர் இடம் வகை மாற்றம்
சிறுதாவூர் உயர்நிலை பள்ளி அமைக்க 1.42 ஏக்கர் இடம் வகை மாற்றம்
ADDED : ஜூன் 05, 2025 08:52 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராமத்தில் துவக்கப் பள்ளியும் உயர்நிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தன.
துவக்கப் பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியரும், உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியரும் படிக்கின்றனர்.
ஒரே வளாகத்தில் இயங்கிய இப்பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாததால் வகுப்பறை, கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், கூடுதல் புதிய கட்டடம் கட்ட முடியாமல், ஏற்கனவே இருந்த கட்டடங்களில் வகுப்புகள் நடந்து வந்தன.
இந்நிலையில், கடந்தாண்டு ஆக., 8ம் தேதி, வகுப்பறையில் இருந்த மாணவியர் மூவரின் தலையில், கட்டடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதில், அவர்கள் மூவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டு, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால், அப்போது இப்பள்ளிக்கு போதிய இடம் ஒதுக்கி, புதிய வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை வலுத்தது. மாணவர்களின் பெற்றோர்களும், பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, இந்த பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரி, சிறுதாவூர் ஊராட்சி தலைவர் அருள், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜியிடம் கோரிக்கை வைத்து வந்தார்.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ., அமைச்சர்கள், கலெக்டரிடமும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, பள்ளிக்கு இடம் ஒதுக்க வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். இதில், சர்வே எண் 458/6 முதல் 458/12 வரையில் அடங்கிய 1.42 ஏக்கர் பரப்பளவு விவசாய, கிராம நத்தம் இடங்கள் கண்டறியப்பட்டன.
தொடர்ந்து, ஊராட்சி மன்ற தீர்மானம், சிறுதாவூர் கிராம நிர்வாக அலுவலர், திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., - டி.ஆர்.ஓ., மாவட்ட கலெக்டர் ஆகியோரின் ஆய்வு அறிக்கை, நில நிர்வாக ஆணையருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, நில நிர்வாக ஆணையர் இந்த நிலத்தை, சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டும் வகையில், பள்ளி கல்வித்துறைக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனால், இதில் தொடர்புடைய அனைவருக்கும், சிறுதாவூர் கிராமத்தினர் நன்றி தெரிவித்து உள்ளனர்.