ADDED : ஜூலை 29, 2024 10:56 PM
தாம்பரம் : மதுரை, வையூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 30. மும்மையில் உள்ள 'சுச்சினா மரைன் சர்வீஸ்' என்ற நிறுவனத்தில்,பொறியாளராக பணி யாற்றி வந்தார்.
இவருக்கு, பேஸ்புக் வாயிலாக, மேற்கு தாம்பரம், முடிச்சூரைச் சேர்ந்த, 27 வயது பெண் பழக்கமானார்.
இருவரும், நான்குஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது, திருமணம் செய்த கொள்வதாக கூறி, அப்பெண்ணுடன், விக்னேஷ்வரன் பல முறை உறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த மே 9ம் தேதி, பதிவு திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதை நம்பி, அப்பெண்ணும் காத்திருந்து ஏமாற்றம்அடைந்துள்ளார்.
இதற்கிடையில், காதலி பட்டியலினத்தவர் என்பது தெரிய வந்ததும், திருமணம் செய்ய மறுத்து, மும்பைக்கு தப்பித்து சென்று விட்டார்.
ஏமாற்றம் அடைந்த அப்பெண், இது குறித்து, தாம்பரம் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த தனிப்படை போலீசார், மும்பைக்குசென்று விக்னேஷ்வரனை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.