/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாற்றுத்திறனாளி மாணவருக்கு முட்டுக்காட்டில் யோகா பயிற்சி மாற்றுத்திறனாளி மாணவருக்கு முட்டுக்காட்டில் யோகா பயிற்சி
மாற்றுத்திறனாளி மாணவருக்கு முட்டுக்காட்டில் யோகா பயிற்சி
மாற்றுத்திறனாளி மாணவருக்கு முட்டுக்காட்டில் யோகா பயிற்சி
மாற்றுத்திறனாளி மாணவருக்கு முட்டுக்காட்டில் யோகா பயிற்சி
ADDED : ஜூன் 23, 2024 03:52 AM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த இ.சி.ஆர்., சாலை, முட்டுக்காட்டில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்படுகிறது.
இங்கு, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பல்வேறு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணையவழி கருத்தரங்கில், யோகா பயிற்சியாளர் ஜோதி, யோகாவின் நன்மைகள் குறித்து விளக்கினார்.
மேலும், யோகாவின் பல்வகை ஆசனங்கள் செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில், நிறுவன இயக்குனர் நசிகேதா ரவுட், துணை பதிவாளர் - பொறுப்பு அமர்நாத் உட்பட அலுவலர்கள், பெற்றோர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.