Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கோதண்டராமர் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை அமைக்கப்படுமா?

கோதண்டராமர் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை அமைக்கப்படுமா?

கோதண்டராமர் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை அமைக்கப்படுமா?

கோதண்டராமர் கோவில் தேருக்கு பாதுகாப்பு கூரை அமைக்கப்படுமா?

ADDED : ஜூலை 23, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம், மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் என அழைக்கப்படும், கோதண்டராமர் திருக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இத்திருத்தலத்தில், உலகில் வேறெங்கும் காண முடியாத மூலவர் சன்னிதியில் ராமர், சீதையை கைப்பற்றியவாறு திருமணக் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்றதாகும்.

இத்திருக்கோவிலில், தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடக்கும். இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, கண்ணாடி அறைக்குள் சுவாமி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, உபயதாரர்கள் நிதியின் வாயிலாக, தேரின் விஸ்தார மேல்மட்ட கொடுங்கை அமைக்கும் பணிகள், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன.

தேரின் அடிபீடம், 15 அடி மற்றும் விஸ்தார மேல்மட்ட கொடுங்கையுடன் சேர்த்து, 52 அடியில் தேர் முழுதும் மரத்தால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேல்மட்ட கொடுங்கை அமைக்கும் பணிக்காக, தேரின் அடிபீடத்தை சுற்றி, மண் துாசு மற்றும் வெயில், மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் துணியால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டது.

தற்போது, சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, அந்த துணிகள் கிழிந்து வீணாகி உள்ளன. இதனால், தேரின் அடிப்பாகத்தில் சிறிய அளவிலான மரச்சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மரச்சிற்பங்கள், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.

மேலும், திறந்தவெளியில் தேர் நிற்பதால், மழை, வெயிலால் பாதிப்படைகிறது. அதனால், தேருக்கு பாதுகாப்பு கூரை அமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us