/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மேம்பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரம் அகற்றப்படுமா? மேம்பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரம் அகற்றப்படுமா?
மேம்பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரம் அகற்றப்படுமா?
மேம்பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரம் அகற்றப்படுமா?
மேம்பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரம் அகற்றப்படுமா?
ADDED : ஜூன் 23, 2024 03:12 AM

அச்சிறுபாக்கம் : திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தொழுப்பேடு மேம்பாலத்தின் இணைப்பு பகுதியில் அரச மரம், வேப்பமரம் வளர்ந்துள்ளது.
அதேபோல், சோத்துப்பாக்கம் மேம்பாலத்தின் பக்கவாட்டிலும் வேப்பமரம் வளர்ந்துள்ளது. இதனால், மேம்பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
அவ்வப்போது, அரச மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவதால், மரத்தின் அடிப்பகுதி வேர் பலம் பெற்று, அதிக வீரியத்துடன் வளர்ந்துள்ளது.
மேலும் வளர்ந்து ஆபத்து ஏற்படுத்தும் முன், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முழுதுமாக வேருடன் அகற்றி, மாற்று இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.