Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 110 கே.வி., துணை மின் நிலையம் கேளம்பாக்கத்தில் மாற்றப்படுமா?

110 கே.வி., துணை மின் நிலையம் கேளம்பாக்கத்தில் மாற்றப்படுமா?

110 கே.வி., துணை மின் நிலையம் கேளம்பாக்கத்தில் மாற்றப்படுமா?

110 கே.வி., துணை மின் நிலையம் கேளம்பாக்கத்தில் மாற்றப்படுமா?

ADDED : ஜூன் 15, 2024 11:08 PM


Google News
திருப்போரூர்:சென்னை புறநகரில் வளர்ந்து வரும் நகர் பகுதியாக, கேளம்பாக்கம் அமைந்துள்ளது. இதை சுற்றி, தையூர், கோவளம், படூர், புதுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதிகளுக்கு, ஆரம்பத்தில் திருப்போரூர், மாம்பாக்கம் துணை மின் நிலையங்களிலிருந்து, மின் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.

இவை போதுமானதாக இல்லாததால், அடிக்கடி மின்னழுத்த குறைவு, மின் தடங்கல் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்படும் மக்கள், கேளம்பாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை அடுத்து, கடந்த 10 ஆண்டுக்கு முன், 33 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போதைய காலகட்டத்தில் கேளம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகள், மேலும் வளர்ச்சியடைந்து வருகின்றன.

அதனால், போதிய அளவு மின் வினியோகம் செய்ய முடியாமல், அடிக்கடி மின் துண்டிப்பும், மின் அழுத்த குறைபாடும் ஏற்பட்டு, மக்கள் சிரமப்படுவதுடன், வீட்டு உபயோக மின் சாதனங்களும் பழுதடைகின்றன.

எனவே, தற்போதுள்ள 33 கே.வி., திறனுக்கு மாற்றாக 110 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையமாக மாற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு மாற்றப்பட்டால், மின் வினியோகம் பெறும் பகுதிகளில், குறைந்த மின்னழுத்த பிரச்னைகள் ஏற்படாது. அடிக்கடி மின் துண்டிப்பும் ஏற்படாது என, மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், கேளம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு, மாம்பாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து பிரதான ஒரே இணைப்பு மட்டும் தான் உள்ளது.

கூடுதலாக, திருப்போரூர் மற்றும் சிறுசேரி துணை மின் நிலையங்களிலிருந்து, பிரதான மின் இணைப்பை இணைத்தால், கேளம்பாக்கத்தில் ஏற்படும் மின் வெட்டிற்கு நிரந்தர தீர்வாக இருக்கும் எனவும், மக்கள் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us