/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ லத்துார் ஒன்றிய குழு தலைவர் யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை லத்துார் ஒன்றிய குழு தலைவர் யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
லத்துார் ஒன்றிய குழு தலைவர் யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
லத்துார் ஒன்றிய குழு தலைவர் யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
லத்துார் ஒன்றிய குழு தலைவர் யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
ADDED : ஜூன் 18, 2024 05:44 AM

பவுஞ்சூர், : லத்துார் ஒன்றியத்தில், 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., 10 வார்டுகளிலும், அ.தி.மு.க., 5 வார்டுகளிலும் வென்றன.
பின், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் பாபுவின் மனைவி சுபலட்சுமி ஒன்றிய குழுத் தலைவராகவும், கிருஷ்ணவேணி ஒன்றிய குழுத் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒன்றிய குழுவை கலைக்க, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் ராமச்சந்திரன் முயற்சி செய்து, கடந்த அக்., 13ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம்கொண்டுவரப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அதனால், லத்துார் ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி காலியாக உள்ளது என, அரசாணை வெளியிடப்பட்டது.
காலியான பதவிகளுக்கான தேர்தல், கடந்த மார்ச் 6ம் தேதி நடந்தது. ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கு, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் ராமச்சந்திரனின் மனைவி சாந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
பின், ஒன்றிய குழு துணை தலைவரை தேர்வு செய்வதில், கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. 1வது வார்டு கவுன்சிலர் சீனுவாசன், 8வது வார்டு கவுன்சிலர் சுஜாதா மற்றும் 10வது வார்து கவுன்சிலர் சித்ரா ஆகியோர், வேட்பு மனு தாக்கல் செய்ய விருப்ப மனு பெற்றனர். இதில், சித்ரா மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, தேர்தல் நடந்து முடிவு அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, தேர்தல் நடத்தும் அதிகாரியான செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், கவுன்சிலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.