Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஸ்தலசயன பெருமாள் கோவில் பரிசாரகர் நியமனம் எப்போது?

ஸ்தலசயன பெருமாள் கோவில் பரிசாரகர் நியமனம் எப்போது?

ஸ்தலசயன பெருமாள் கோவில் பரிசாரகர் நியமனம் எப்போது?

ஸ்தலசயன பெருமாள் கோவில் பரிசாரகர் நியமனம் எப்போது?

ADDED : ஜூன் 01, 2024 11:45 PM


Google News
மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மடப்பள்ளி பரிசாரகர் நியமிக்கப்படாததால், பட்டாச்சாரியார் வீட்டிலேயே நைவேத்ய உணவு சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. வைணவ 108 திவ்யதேச கோவில்களில், 63வதாக விளங்குகிறது.

ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து, பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், சுவாமிக்கு காலை, பகல், இரவு ஆகிய வேளைகளில், சாதம், தயிர்சாதம், புளியோதரை, கதம்பசாதம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நைவேத்ய உணவுகள் சமைக்க, மடப்பள்ளிக்கான பரிசாரகர் நியமிக்கப்படவில்லை.

இதற்கு முன் பரிசாரகராக பணியாற்றியவர், மூன்றாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். பின், அவ்விடத்திற்கு ஊழியர் நியமிக்கப்படாததால், பணி ஓய்வு பெற்ற அவரே, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்தார்.

வயது மூப்பு காரணமாக, அவரால் பணி செய்ய இயலாதபோது, கோவில் அலுவலக ஊழியரே, நைவேத்ய உணவு சமைப்பார்.

தற்போது, ஊழியராலும் நிர்வாக பணிகள் உள்ளிட்ட காரணங்களால், இப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து, கோவில் பட்டாச்சாரியார் வீட்டிலிருந்தே, நைவேத்ய உணவுகள் சமைக்கப்பட்டு, கோவிலில் சுவாமிக்கு படைக்கப்படுகிறது.

பல மணி நேர பணிக்கு, குறைவான ஊதியமே வழங்குவதால், இப்பணி செய்ய தயங்குவதாக, நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

திவ்யதேச சிறப்பு கருதி, மடப்பள்ளி பரிசாரகரை உடனே நியமிக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us