/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தந்தையை கொன்ற மகன் கைது உதவிய நண்பர்களுக்கு வலை தந்தையை கொன்ற மகன் கைது உதவிய நண்பர்களுக்கு வலை
தந்தையை கொன்ற மகன் கைது உதவிய நண்பர்களுக்கு வலை
தந்தையை கொன்ற மகன் கைது உதவிய நண்பர்களுக்கு வலை
தந்தையை கொன்ற மகன் கைது உதவிய நண்பர்களுக்கு வலை
ADDED : ஜூலை 16, 2024 05:11 AM

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சி வேண்டவரசி அம்மன் கோவில் தெருவில் வசித்தவர் துரை, 40; கொத்தனார்.
நேற்று முன்தினம், வீட்டின் மாடியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இது குறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன், துரையின் உடலை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வந்தார்.
விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:
துரைக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி மற்றும் மகன்கள் அவரை விட்டு பிரிந்து, மூன்று ஆண்டுகளாக அருகில் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
அவ்வப்போது, துரை தன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால், அவரின் மூத்த மகன் கவுசிக், 18, அவரது நண்பர்களான சுந்தர்ராஜ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரின் உதவியுடன், தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
நேற்று முன்தினம், வீட்டின் மாடியில் மது அருந்திக்கொண்டு இருந்த துரையை, முகம் மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
தந்தையை கொன்ற மூத்த மகன் கவுசிக் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள அவரது நண்பர்கள் இருவரை தீவிரமாக தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.