/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆடி வெள்ளி பால்குட உற்சவம் முதுகரை கோவிலில் விமரிசை ஆடி வெள்ளி பால்குட உற்சவம் முதுகரை கோவிலில் விமரிசை
ஆடி வெள்ளி பால்குட உற்சவம் முதுகரை கோவிலில் விமரிசை
ஆடி வெள்ளி பால்குட உற்சவம் முதுகரை கோவிலில் விமரிசை
ஆடி வெள்ளி பால்குட உற்சவம் முதுகரை கோவிலில் விமரிசை
ADDED : ஜூலை 19, 2024 04:05 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே முதுகரை கிராமத்தில், அம்மச்சாரம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை பால்குட உற்சவம் விமரிசையாக நடக்கும்.
இந்த ஆண்டும், ஆடி வெள்ளி பால்குட உற்சவத்தை விமரிசையாக நடத்த கிராம மக்கள் முடிவு செய்து, நேற்று காலை 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் விழா துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான பால் குடம் எடுத்தல் காலை 7:00 மணிக்கு நடந்தது. மாரியம்மன் கோவிலில் இருந்து, 250க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பால் குடம் சுமந்து, முக்கிய வீதிகள் வழியாக, அம்மச்சாரம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனுக்கு, தீப ஆராதனை காட்டப்பட்டது. முதுகரை மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.